Posted by: KG | Monday, June 18, 2007

இரு குடைகள் இருந்தும்

Iru kudai irundhum nanaigiren

பட்டு புல்வெளி
உன் கன்னங்கள் என் மனதில்
மண் வாசனை
உன் வாசம் என் அருகில்
சிவந்த ஈர மண்
உன் இதழ்கள் என் நினைவில்
வர,

உனக்கொன்றும் எனக்கொன்றுமாய்
இரு குடைகள் ஏந்தி வந்தேன்
உணர்ச்சி பொங்க நீ வருவாய் என
நினைந்து ஏங்கி நின்றேன்

காதல் நாடி உலகை மறந்து
உன்னை நினைய வந்தவன்
இமை மூடி உன்னுருவம் நினைந்து
மெய் மறந்து நிற்கிறேன்

உன்,
ஆ(இ)சை மழையில் நீந்த வந்தவன்
வானின்,
ஈர மழையில் நனைகிறேன்
இரு குடைகள் இருந்தும்.

மழைக்காற்று,
அருகில் உள்ளாய் என சொன்னது
ஒளிக்கீற்று,
உன்னுருவம் எங்கென தேடி அலைந்தது

என்னுள் இருந்த உன்னை அறிய
பாவம் ஒளியால் எப்படி முடியும்
மின்னல் வேகஒளி அறியா உருவம்
வெறெந்த செயலி உணர முடியும்

எனவே,
என்னுள் இருந்த உன்னை உணர
இமை மூடி மழையில் நனைந்தேன்
இரு குடைகள் இருந்தும்.


Responses

  1. machi.. oru koodai sunlight .. oru koodai moonlight will suit the picture😀

    btw, nalla kavidhai😀

  2. I thought of saying the same thing .. I saw this photo in the album he sent😉

  3. Kooool!😉

    i didn’t notice that myself.. both of you seem to have had the same different eye.

  4. super da. romba nalla irukku.

  5. Unakulla ipdi oru kavignana??? super da!

  6. ambi kanna neeyada cant believe i will think it over and tell u ammmaa apdinnu solureamathiriirkuthu


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: